மலைப்பாம்பு பிடிபட்டதால் பரபரப்பு
12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கே.வி.குப்பம்
மலைப்பாம்பு பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லத்தேரியை அடுத்த காளாம்பட்டு கீழ்அச்சிக்கட்டு கிராமத்தில் மலைப்பாம்பு சுற்றித்திரிந்து வந்தது. அந்த பாம்பு கோழிகளையும், கால்நடைகளையும் இரையாக்கி வந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் வெங்கடேசரெட்டியார் என்பவர் வீட்டுக்கு அருகில் நள்ளிரவில் ஊர்ந்து செல்லும் ஓசையும் சலசலப்பும் கேட்டது.
விளக்கை ஏற்றிப் பார்த்தபோது வீட்டின் அருகில் கருப்பு நிறத்தில் ஏதோ வளைந்த நிலையில் இரும்பு குழாய் போல காணப்பட்டது. அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது இரும்பு குழாய்போல் இருந்தது பாம்பு என்பதை உறுதி செய்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பால்பாண்டி, முருகேசன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி பாம்பை உயிருடன் பிடித்தபோது சுமார் 12 அடி நீளமிருந்தது. அது மலைப்பாம்பாகும். அந்ாத பாம்பை கோணிப்பையில் போட்டு எடுத்துச் சென்று, பனமடங்கி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.=