பூசாரிப்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம்
பூசாரிப்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்
சேலம்,
ஓமலூர் அருகே பூசாரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் (எஸ்.எம்-80) உள்ளது. இதன் செயலாளராக சுப்ரமணி என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரை பணி இடைநீக்கம் செய்து மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, சுப்ரமணி அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும், ஆவணங்கள் முறையாக பராமரிப்பது இல்லை என்றும் புகார் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டதில் அவர் பணிக்கு வராமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சுப்ரமணியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story