தூய்மை நடைபயணம்


தூய்மை நடைபயணம்
x

தூய்மை நடைபயணம் நடந்தது.

கரூர்

வெள்ளியணையில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் நடைபெற்றது.ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற இந்த நிழ்ச்சியை கிராம சுகாதார செவிலியர் சுதா, உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மைய ஆலோசகர் ராஜேஸ்வரி முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தொடங்கிய நடைபயணம் கடைவீதி மற்றும் முக்கிய குடியிருப்புகள் வழியாக சென்று பஸ் நிறுத்தப் பகுதியில் முடிவடைந்தது. இந்த நடைபயணத்தில் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் அதை முறையாக பராமரித்தல் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு சென்றனர்.


Next Story