விருதுநகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம்
விருதுநகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் அகமது நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் எலைட்ரோட்டரி சங்க உதவியுடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கு மையம் அமைத்துள்ளது. இதனை நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த மையத்தின் மூலம் நகராட்சி 8-வது வார்டிலும் அதனையொட்டி உள்ள வார்டுகளிலும் வசிக்கும் மக்களுக்கு 2 குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்த நகராட்சி தலைவர் மாதவன் அடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 வார்டுகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story