கூத்தபெருமாள் அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
கூத்தபெருமாள் அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் கிராமத்தில் கூத்தபெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் புரவி எடுப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் கொடிவயல்கிழக்கு வேளாளர் தெருவில் செய்யப்பட்ட அய்யனார், கருப்பர், காளியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளும், 200-க்கும் மேற்பட்ட குதிரை, காளை, மதலை உள்ளிட்ட சிலைகளை பக்தர்கள் மேள தாளம் முழங்க ஊர்வலமாக தோளில் சுமந்து கொண்டு வந்து அய்யனார் கோவில் அருகில் உள்ள கண்மாய் திடலில் இறக்கி வைத்தனர். அய்யனார், கருப்பர் காளியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளுக்கு கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றபின் கோவிலுக்கு எடுத்துச் சென்று இறக்கி வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த புரவி எடுப்பு விழாவில் அமரசிம்மேந்திரபுரம், கொளக்குடி, கொடிவயல், மங்களநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.