புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆறுமுகநேரி:
புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தின் 472- வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பக்தர்கள் நேர்த்திக்கடன் கொடிகளை முக்கிய தெருக்கள் வழியாக பவனியாக கொடிமரத்துக்கு எடுத்து வந்தனர்.
அங்கு இருந்த பிரமாண்டமான கொடி மரத்தில் நேர்த்திக்கடன் கொடிகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் முன்னாள் புன்னக்காயல் பங்கு தந்தையும், தற்போதைய அமலிபுரம் பங்குத் தந்தையுமான வில்லியம் சந்தானம் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் விக்டர்லோபோ அடிகளார், தமியான் அடிகளார், புன்னக்காயல் பங்கு தந்தை டைட்டஸ் அடிகளார், உதவி பங்கு சந்தை டிமெல் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் புன்னக்காயல், தூத்துக்குடி, சேர்ந்த பூமங்கலம், ஆத்தூர், மற்றும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இன்று (சனிக்கிழமை) காலையில் உறுதிபூசுதல் வழங்கும் சிறப்பு திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடக்கிறது. இதில் மறைமாவட்ட முதன்மைக் குரு பன்னீர்செல்வம் அடிகளார், ஆயரின் செயலர் ரினோ அடிகளார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.