புகாா் பெட்டி
புகாா் பெட்டி
பழுதடைந்த ரோடு
கோபி புதுப்பாளையத்தில் இருந்து கமலா ரைஸ் மில் வீதி ரோடு பாரியூர் இணைப்புச் சாலையில் இணைகிறது. அந்த ரோட்டில் சுகாதார அலுவலக வளாகம் எதிரில் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த சாலையை செப்பனிட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், கோபி புதுப்பாளையம்.
தேங்கி நிற்கும் மழைநீர்
மொடக்குறிச்சியை அடுத்த முகாசிஅனுமன்பள்ளி அருகே உள்ள சென்னிபாளி கடைவீதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி ரோட்டில் ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே கடைவீதியில் வடிகாலை சரிசெய்து தண்ணீர் தங்குதடையின்றி செல்ல சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சென்னிபாளி.
தடுப்பு வேலி
அந்தியூரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடை சந்தை பெரிய அளவில் நடைபெறுகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கால்நடைகளை விற்பதற்காக கொண்டு வருகிறார்கள். சந்தை கூடும் இடத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதில் தெரியாமல் சிலர் மாடுகளை கட்டி வைத்துவிடுகிறார்கள். அதனால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
சந்திரன், அந்தியூர்
தூர்வாரப்படுமா?
புஞ்சை புளியம்பட்டி 11-வது வார்டில் சரோஜினி வீதியில் சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் குப்பைகளும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரோஜினி வீதியில் சாக்கடையை தூர்வாரி, குப்பைகளை அகற்ற ஆவன செய்யவேண்டும்.
கபில்தேவ், புஞ்சைபுளியம்பட்டி.
சீரமைக்க வேண்டும்
கோபி கமலா ரைஸ் மில் 2-வது வீதியில் ரோடு போட்டாா்கள். அப்போது அங்குள்ள குடிநீா் குழாய் ேராட்டின் மட்டத்துக்கும் கீேழ சென்றுவிட்டது. குழாயின் கைப்பிடி தரையில் மோதுவதால் அப்பகுதி மக்களால் குடிநீழாயை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாயை ரோட்டின் மட்டத்துக்கு மேலே உயர்த்தி சீரமைத்து தருவார்களா?
விஸ்வம், கோபி.
சாலை சரி செய்யப்படுமா?
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் இருந்து வெங்கநாயக்கன்பாளையம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. நீண்ட ஆண்டுகளாகவே இந்த சாலை கவனிக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் உள்ள எட்டு வார்டு மக்களும் இந்த சாலையின் வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்து தரவேண்டும்.
மூர்த்தி, புஞ்சைபுளியம்பட்டி.
மறைக்கப்பட்ட வழிகாட்டி
அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்வதற்கு அந்தியூரில் வழிகாட்டும் ஊர் பெயர் பலகை வைத்துள்ளனர். அவற்றை சுற்றிலும் மரங்கள் வளர்ந்து ஊரின் பெயர் தெரியாமல் இருக்கிறது. வாகன ஓட்டிகளுக்கு வசதியாக ஊரின் பெயர் பலகை தெரியும்படி மரக் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
ெபாதுமக்கள், அந்தியூர்
ரோட்டில் பெரிய பள்ளம்
ஈரோடு வெண்டிபாளையம் ரெயில்வே கேட் அருகே ரோட்டின் வளைவில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. இந்த ரோடு வழியாக நாள்தோறும் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் பயணம் செய்கிறார்கள். பெரிய பள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் இறங்கி ஏறும்போது தடுமாறி விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ரோட்டில் உள்ள பெரிய பள்ளத்தை சீரமைப்பார்களா?
பொதுமக்கள், வெண்டிபாளையம்.