புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு


புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு
x

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு பெற்றது.

கரூர்

வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இதையொட்டி தினமும் தொடர்ந்து 48-நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காலை 48-ம் நாள் மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடைபெற்றது.

இதையொட்டி கோவில் வளாகத்தில் அக்கினி குண்டம் வைக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் வேள்வி வழிபாடுகளுடன் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் அக்கினி குண்டத்தில் வேத மந்திரங்கள் ஓதினார்கள். பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காந்தி மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணி குழு தலைவரும், புகழூர் நகராட்சி தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமையிலான திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


Next Story