மாங்காய்களை அறுவடை செய்ய முயன்ற வனத்துறையினர் பொதுமக்கள் முற்றுகை


மாங்காய்களை அறுவடை செய்ய முயன்ற வனத்துறையினர்  பொதுமக்கள் முற்றுகை
x

மகேந்திரமங்கலம் அருகே வனத்துறைக்கு சொந்தமானது என கூறி மாங்காய்களை அறுவடை செய்ய முயன்ற வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

பாலக்கோடு:

மா சாகுபடி

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம், குண்டாங்காடு, கண்டகபைல், குளிக்காடு, கொத்தளம் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் அப்பகுதி மக்கள் மா சாகுபடி செய்துள்ளனர். இதில் செந்தூரா, பீத்தர், பங்கனபள்ளி, மல்கோவா, நீலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ராகங்கள் நடப்பட்டு பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடப்பு பருவத்தில் சீதோஷ்ண நிலை மற்றும் பூச்சி தாக்குதலால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் மாங்காய் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பாலக்கோடு வனத்துறையினர் கொத்தளம் வனப்பகுதிக்கு சென்று விளைச்சலுக்கு வந்துள்ள மாங்காய்களை வனத்துறைக்கு சொந்தமானது என கூறி பறிக்க முயன்றனர்.

முற்றுகை

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வனசரகர் நடராஜன் மற்றும் வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், நாங்கள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. இதனால் சாகுபடி செய்த மாங்காய்களை பறிக்க கூடாது. இங்கிருந்து வெளியேறுங்கள் என்று கூறினர். அதன்பின்னர் வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story