மக்கள் தொடர்பு முகாம்
மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், குண்டவெளி மேற்கு (ஆலத்திப்பள்ளம்) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 188 மனுக்கள் பெறப்பட்டு, 102 மனுக்கள் ஏற்கப்பட்டும், 83 மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டும், 3 மனுக்கள் விசாரணையிலும் உள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற இம்முகாமில் 79 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், மகளிர் திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், அஞ்சலகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக பேசினார். இம்முகாமில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குனர் அன்பரசி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.