மக்கள் தொடர்பு முகாம்


மக்கள் தொடர்பு முகாம்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி தாலுகா பிரான்மலை கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ராமசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி அன்பு செழியன் ஆகியோர் வரவேற்றனர். சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். தொடர்ந்து 65 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினர். மேலும் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கணினி திருத்தம் என மொத்தம் 129 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

முகாமில் சிங்கம்புணரி தனி வட்டாட்சியர் ஆனந்த், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிரான்மலை வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


Next Story