மக்கள் தொடர்பு முகாம்


மக்கள் தொடர்பு முகாம்
x

பட்டிவீரன்பட்டி அருகே மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். முகாமில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு, புதிய ரேஷன் கார்டு, வங்கிக்கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 350-க்கும் மேற்பட்டோர் மனுக்களை கொடுத்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

முகாமில் கலெக்டர் விசாகன் பேசும்போது, கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிற வங்கிகள் கடன் வழங்குவதற்கு தயாராக உள்ளன. ஆடு, மாடு வாங்குவதற்கும், விவசாயத்துக்கும் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இதேபோல் புதிய தொழில் தொடங்குவதற்கு ரூ.1 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கடன் பெறலாம். வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் முறையாக திருப்பி செலுத்தினால், அவர்கள் மீதான நம்பிக்கை அடிப்படையில் அவர்களுக்கு வங்கிகள் அதிக கடன்களை வழங்கும் என்றார்.

இந்த முகாமில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், ஆர்.டி.ஓ. பிரேம்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பாஸ்கரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சண்முகம், சமூக பாதுகாப்புத்திட்ட துணை ஆட்சியர் ராஜசேகர், ஆத்தூர் தாசில்தார் சரவணன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏழுமலை, தட்சிணாமூர்த்தி, சித்தரேவு ஊராட்சி தலைவர் வளர்மதி மலர்கண்ணன், செயலாளர் சிவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

--------


Next Story