லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ஆம்பூர் அருகே லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
ஆம்பூரை அடுத்த மின்னூர் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாக விண்ணமங்கலம் மலைப்பகுதியில் செயல்படும் கல்குவாரிக்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்கள் போக்குவரத்து காரணமாக அந்த பகுதியில் புழுதி கிளம்புவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
எனவே இந்த கிராமத்தின் வழியாக வாகனங்கள் சென்றுவர அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி மீது கல்குவாரியில் இருந்து வந்த லாரி மோதியது. இதனால் குடிநீர் தொட்டி பழுதடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த வழியாக வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story