கடையநல்லூரில் பொதுக்கூட்டம்


கடையநல்லூரில் பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பில் கடையநல்லூரில் ஷரியத் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பில் காயிதே மில்லத் திடலில் ஷரியத் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் அன்வர் சாதிக், துணைத்தலைவர் செங்கோட்டை ஹாஜா, செயலாளர்கள் ஜலாலுதீன், பிலால், பீர்முகமது, அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் நெல்லை சுலைமான், மாநில தணிக்கை குழு தலைவர் மயிலை அப்துல் ரஹீம் ஆகியோர் அரசியல் அமைப்பை பாதுகாப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், கடையநல்லூர் நகரில் சீரான குடிநீர் வினியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும், கடையநல்லூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story