பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்


பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநகராட்சி 55-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் மனு கொடுத்தார். அந்த மனுவில், வி.எம்.சத்திரம், அப்துல் ரகுமான் நகர், முதலாளி நகர், 1-வது மெயின் ரோட்டில் திருச்செந்தூர் சாலை அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அந்த பள்ளத்தை மூட வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல் பலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். கூட்டத்தில் உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாட்ஷா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



Next Story