பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 40 மனுக்களும், வேலைவாய்ப்புகோரி 20 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 39 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 20-ம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிக்கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 49 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி 10 மனுக்கள் என மொத்தம் 178 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சீர்காழி வட்டம், 22 வடகால் கிராமம், பள்ளி வாசல் தெருவை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் சவூதி அரேபியாவில் இறந்ததற்கான இழப்பீட்டு தொகையான ரூ.6 லட்சத்து 83 ஆயிரத்து 795-க்கான காசோலையை அவரது தாயார் பீவி பாத்திமாவிடம் கலெக்டர் வழங்கினார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.