மாவட்டத்தில், 10 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது


மாவட்டத்தில், 10 இடங்களில்    பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்    வருகிற 10-ந்தேதி நடக்கிறது
x

கடலூர் மாவட்டத்தில், 10 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.

கடலூர்


குறைதீர் முகாம்

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ஆகிய குடிமை பொருள் தனி தாசில்தார் அலுவலகங்கள், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்ட வழங்கல் அலுவலகங்களில் வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடக் கிறது.

முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். முகாமில் கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடை களுக்கு சென்று பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

புதிய குடும்ப அட்டை

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறு வதற்குரிய மனுக்களை அளிக்கலாம். மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம்.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார் அளிக்கலாம். தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட படி நடவடிக்கை எடுப்பதற்கான மனுக்களை முகாம்களில் அளித்து பயன் பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story