வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x

திருவண்ணாமலையில் வீட்டுமனை பட்டா கேட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வீட்டுமனை பட்டா கேட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுமனை பட்டா

திருவண்ணாமலை ஒன்றியம் நவம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா இருதயபுரம் கிராமத்தில் 126 குடும்பங்களும், அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா சின்னப்பாலியப்பட்டு கிராமத்தில் 16 குடுமபங்களும், தண்டராம்பட்டு அருகில் வாணாபுரம் பெரியமலை பாதை இருளர் குடிசை பகுதியில் 26 குடும்பங்களும் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் அந்த பகுதியில் வீடுகட்டி குடியிருக்கும் வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு வசதி, சாலை வசதி, குடிநீர் வசதிகளும் உள்ளது. அவர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்ததாக கூறுப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களிடம் உதவி கலெக்டர் மந்தாகினி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஒரு வாரத்திற்குள் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத் தொடர்ந்து அவர்கள் கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டரிடம் வழங்கினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பட்டா கேட்டு கிராமத்தில் இருந்து நடைபயணமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.


Next Story