பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
தென்காசி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தென்காசி
தென்காசி அருகே உள்ள மேலபாட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தென்காசி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது: எங்கள் ஊரில் சமீபத்தில் நடைபெற்று வருகிற கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட அட்டையில் மக்கள் நல பணியாளர் மற்றும் பொறுப்பாளர்களால் ஒவ்வொருவருக்கும் வறுமைக்கோடு பட்டியலில் உள்ள நபர்களுக்கு ஒரு சிலருக்கு மட்டும் முத்திரை பதிவு செய்து கையொப்பமிட்டு கொடுத்து வருகிறார்கள். இதில் சில சந்தேகங்கள் உள்ளன. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story