பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x

மூன்றடைப்பு அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரியை அடுத்து மூன்றடைப்பு அருகில் உள்ளது பூலம் கிராமம். இப்பகுதி மக்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் ஊரின் வெளி பகுதியில் உள்ளது. தற்போது புதிதாக வீடு கட்டி குடியிருக்க அந்த இடம் மட்டும் உள்ளது. எனவே ஊர் மக்கள் அங்கு சென்றபோது தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டு வந்து ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுகுறித்த தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் மூன்றடைப்பு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story