சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x

சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர் அருகே சூரப்பட்டியில் இருந்து அம்மாபட்டி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மண் சாலையாகவே இருந்து வந்தது. இச்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. சாலையில் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு ஆறு மாத காலம் ஆகியும் சாலை அமைக்கும் பணி முடிவடையவில்லை. இந்த வழியாக அதிக அளவிலான பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கும் இச்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story