சுண்ணாம்புக்கல் குவாரி விஸ்தரிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்


சுண்ணாம்புக்கல் குவாரி விஸ்தரிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
x

புதுப்பாளையம் கிராமத்தில் சுண்ணாம்புக்கல் குவாரி விஸ்தரிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் 2 நாட்கள் நடக்கிறது.

அரியலூர்

சுண்ணாம்புக்கல் குவாரி

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதுப்பாளையம் சுண்ணாம்பு கன்கர் மற்றும் சுண்ணாம்புக்கல் குவாரி 22.96.0 ஹெக்டேர், புல எண்.144, 217/1ஏ, 217/1சி, 217/2, 217/3ஏ, 217/3பி, 217/4, 217/5, 217/6, 218/1, 219/1, மற்றும் பிற இடங்களில் விஸ்தரிக்க உத்தேசித்துள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பாளையம் ஈஸ்வரன் கோவில் ஏரி எதிர்புறத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதேபோல் புதுப்பாளையம் கிராமத்தில் 23.35.0 ஹெக்டேர், புல எண்கள். 222/1, 222/2ஏ, 222/11ஏ, 225 மற்றும் பிற இடங்களில் அதே நிறுவனத்தின் சுண்ணாம்பு கன்கர், சுண்ணாம்புக்கல் குவாரி விஸ்தரிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாளை மறுநாள் மதியம் 2.30 மணிக்கு புதுப்பாளையம் ஈஸ்வரன் கோவில் ஏரி எதிர்புறத்தில் அரியலூர் ஆர்.டி.ஓ. தலைமையில் நடக்கிறது.

கருத்து கேட்பு கூட்டம்

23.02.5 ஹெக்டேர், புல எண்கள். 229/3ஏ, 230/2ஏ, 237/1, 237/4ஏ, மற்றும் பிற இடங்களில் அதே நிறுவனத்தின் சுண்ணாம்பு கன்கர், சுண்ணாம்புக்கல் குவாரி விஸ்தரிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 8-ந்தேதி காலை 10.30 மணிக்கும், 22.89.0 ஹெக்டேர், புல எண்கள். 350, 351/1ஏ, 351/4ஏ, 351/7ஏ மற்றும் பிற இடங்களில் அதே நிறுவனத்தின் சுண்ணாம்பு கன்கர், சுண்ணாம்புக்கல் குவாரி விஸ்தரிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் 8-ந்தேதி மதியம் 2.30 மணிக்கும் புதுப்பாளையம் ஈஸ்வரன் கோவில் ஏரி எதிர்புறத்தில் அரியலூர் ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் அப்பகுதியில் வசிக்கும் உண்மையான குடிமக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் பிறர் உள்ளடங்கலாக அனைவரும் பங்கேற்கலாம். மேலும் மேற்கண்ட தொழிற்திட்டங்களை பற்றி அவர்களுடைய கருத்துக்களை வாய் மொழியாகவோ, எழுத்து வடிவிலோ தெரிவிக்கலாம். அவை பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம், என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story