கொட்டையூரில் பொதுமக்கள் சாலைமறியல்


கொட்டையூரில் பொதுமக்கள் சாலைமறியல்
x

கொட்டையூரில் பொதுமக்கள் சாலைமறியல்

தஞ்சாவூர்

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதை கண்டித்து கொட்டையூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே மேலக்கொட்டையூர் பகுதியில் கும்பகோணம்- திருவையாறு சாலை குறுக்கே தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட இந்த சாலை கல்லணை- பூம்புகார் புராதன சாலை எனவும், இதனை வழிமறித்து நெடுஞ்சாலை அமைக்காமல் பாதாள வழித்தடம் அமைத்து புராதன சின்னம் வாய்ந்த இந்த பாதையை பாதுகாக்கும் வகையில் சாலை பணிகளை மேற்கொள்ள தவறிய அரசு நிர்வாகத்தை கண்டித்தும், இந்த பகுதியில் தற்போது 1 கிலோ மீட்டர் தூரம் சென்று சுற்றி வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சேவை சாலையானது (சர்வீஸ் ரோடு) பாதுகாப்பற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் நேற்று கொட்டையூரில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜாபர் சித்திக், சுவாமிமலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசன், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அதில் விரைவில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஆவண செய்வதாகவும், தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் சேவை சாலையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மின்விளக்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்ததனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story