வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருநங்கைகளுக்கு தள்ளுவண்டி வழங்கல்
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருநங்கைகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கூட்டுறவுத்துறை சார்பில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தலா ரூ.20 ஆயிரம் மதிப்பில் 3 தள்ளுவண்டிகளை கலெக்டர் பிரபுசங்கர் திருநங்கைகளுக்கு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- மணவாசி திருநங்கையர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது திருநங்கைகள் வசிக்கும் பகுதியை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தருவது குறித்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வாழ்வாதாரத்திற்காக தள்ளுவண்டி போன்ற தேவைகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர்.
அதன் அடிப்படையில் கூட்டுறவுத்துறை சார்பில் குளித்தலை- தோகைமலை ஆசிரியர் கூட்டுறவு சங்கம், கடவூர் ஊராட்சி ஒன்றியம் ஆசிரியர் கூட்டுறவு சங்கம், கரூர் மாவட்ட காவல் துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகிய கூட்டுறவு சங்களின் சார்பில் தலா ரூ.20 ஆயிரத்தில் 3 தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன, என்றார். இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சைபுதீன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.