முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2023 4:15 AM IST (Updated: 30 Sept 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

சாலைப்பணியாளர்கள் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு வட்டக்கிளை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட துணை தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதையடுத்து சாலைப்பணியாளர்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை தபால் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் போட்டனர். அந்த மனுக்களில், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அதே துறையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.


Next Story