ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்துணவு அங்கன்வாடி, ஊராட்சி செயலர், வருவாய் கிராம ஊழியர் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைத் தலைவர்கள் சமஸ்தானம், ராமசாமி, கமாலுதீன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இணைச் செயலாளர்கள் மாடசாமி, மனோகர், பரமசிவன், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பொருளாளர் டெரன்ஸ், போக்குரவத்துத் துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் எட்டப்பன், பிரான்சிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story