கடையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
கடையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசி
கடையம்:
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடையம் ஒன்றிய குழு சார்பில் கடையம் சின்னத்தேர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் பூங்கொடி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சின்னத்தாய், விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம், தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆயிஷா பேகம், கடையம் வட்டார காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்துராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கம் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விவசாய சங்க தலைவர் ஜெயராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story