தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்


தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்
x

தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளரும், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவருமான சக்திவேல், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளரும், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளருமான ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடியை முழுவதுமாக திரும்ப செலுத்த வேண்டும். ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு பண பாக்கி தொகை ரூ.140 கோடியை கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி 15 நாட்களில் ஆலை நிர்வாகம் வழங்கவில்லையென்றால், 15 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். இதில் தமிழக அரசு தலையிட்டு கரும்பு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story