நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்த எதிர்ப்பு - தொழிலாளர்கள் முற்றுகை...!


நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்த எதிர்ப்பு - தொழிலாளர்கள் முற்றுகை...!
x
தினத்தந்தி 18 Jun 2022 1:13 PM IST (Updated: 18 Jun 2022 1:13 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வெளிமாநில சுமை தூக்கும் தொழிலாளர்களை பணி அமர்த்த கூடாது என்று தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி செம்புளிச்சாம்பாளையதில் தமிழக நுகர்பொருள் வாணிபக் கிடங்கு உள்ளது. இங்கிருந்து அந்தியூர் தாலுக்கா உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பப்படுகின்றது.

இந்த நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் அந்தியூர், அத்தாணி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சுமை தூக்குவோர் களப்பணிக்கு ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமை தூக்கும் தொழிளார்கள் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்

அப்போது அவர்கள் கூறியதாவது,

அதிகப்படியான பொருட்களை அனுப்பும் பொழுது ஆள் பற்றாக்குறையால் வெளிமாநில தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். உங்கள் பணி பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story