பென்னாகரத்தில்மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி
பென்னாகரம்:
பென்னாகரம் தற்காலிக பஸ் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர் வசதிகளை அமைக்க வேண்டும். பஸ் நிலைய பணிகளை விரைவாக முடிக்ககோரி பென்னாகரம் தற்காலிக பஸ் நிலையம் முன்பு நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார குழு உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சிவா, திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி பென்னாகரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் கருப்பண்ணன், மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர்கோபிநாத் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தல் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் வட்டார குழு உறுப்பினர் சுந்தர் நன்றி கூறினார்.
இதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கீதாவிடம் மனு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story