தர்மபுரி, கிருஷ்ணகிரியில்மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.போராட்டத்துக்கு
மாநில துணைத்தலைவர் ஜீவா தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன், மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் வெண்ணிலா, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜன், மின்வாரிய பொறியாளர் அமைப்பின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்காக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், தர்ணா போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. கிருஷ்ணகிரி மத்திய அமைப்பு திட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சாமுடி, ராஜேந்திரன், சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வாசுதேவன், திட்ட செயலாளர் கருணாநிதி, ஓய்வுபெற்றோர் நல அமைப்பு செயலாளர் முனிரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், திட்ட பொருளாளர் முனிசாமி நன்றி கூறினார்.
பணி நிரந்தரம்
அப்போது மின்சார வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதில் ஒப்பந்த முறையை புகுத்த கூடாது. இ- டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மின்வாரிய தொழிலாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.