பணம் வைத்து சூதாடிய 20 பேர் மீது வழக்குப்பதிவு


பணம் வைத்து சூதாடிய 20 பேர் மீது வழக்குப்பதிவு
x

பணம் வைத்து சூதாடிய 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம், நெடுங்குடி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தனிப்படையினர் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு வாகனங்கள் அதிக அளவில் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 501 மற்றும் 21 செல்போன், 4 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story