சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும்


சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பாண்டீஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை நகராட்சி பகுதிகளில் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்கள் 2023-2024-ம் அரையாண்டிற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை வருகிற ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தினால் வரி தொகையை அடிப்படையாக கொண்டு குறைந்தபட்சமாக 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000 வரை ஊக்க தொகை வழங்கப்படும்.

மேலும் சொத்து வரியினை நகராட்சி கருவூலத்திலும், http://tnurbanepay.tn.gov.in என்ற நகராட்சி வலைதளத்திலும் tnurbanesevai (CMA-UTIS) என்ற செல்போன் செயலி வழியாகவும் செலுத்தலாம். எனவே சிவகங்கை நகரில் சொத்து வரி செலுத்துபவர்கள் 2023-2024-ம் முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெற்று பயன் அடையலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story