ரூ.58¾ லட்சத்தில் திட்டப்பணிகள்
பர்கூர் பேரூராட்சியில் ரூ.58¾ லட்சத்தில் திட்டப்பணிகளை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி
பர்கூர்
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் ரூ.58.76 லட்சம் மதிப்பில் 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், திடக்கழிவு மேலாண்மை கூடம், கழிவறைகள் சீர்செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் செயல் அலுவலர் செந்தில்குமார், தி.மு.க. பொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலன், நகர செயலாளர் வெங்கட்டப்பன், பேரூராட்சி துணைத்தலைவர் லட்சுமி மனோகரன், ஒன்றிய செயலாளர் அறிஞர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story