ரூ.7 கோடியில் திட்ட பணிகள் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்


ரூ.7 கோடியில் திட்ட பணிகள் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி பகுதியில் ரூ.7 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி பேரூராட்சி பகுதியில் நபார்டு திட்டம் 2021-22ஆம் ஆண்டின் கீழ் சுமார் ரூ.4 கோடியில் சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு அருகாமையில் சின்ன ஆவுடைப்பேரி கலிங்கல் ஆற்றில் பாலம் அமைப்பதற்கும், சிவகிரி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த வடக்குசத்திரத்தில் இருந்து வடுகபட்டி தென்மலை செல்லும் சாலையின் குறுக்கே அமைந்துள்ள ஆற்றில் 3 கோடி ரூபாய் செலவில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் பாலம் அமைப்பதற்கும் பல்வேறு திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கலிங்கல் ஓடையில் பாலம் அமைக்கும் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருச் செல்வம், சிவகிரி பேரூராட்சி தலைவி கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, துணைத் தலைவர் லட்சுமி ராமன், நிர்வாக அதிகாரி வெங்கடகோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் எம்.குமார் எம்.பி., டாக்டர் சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., மாநில செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி.சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன் முத்தையா பாண்டியன், துணைத் தலைவர் சந்திரமோகன், சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரிய துரை, சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணை தாசில்தார் வெங்கிடசேகர், சமூக பாதுகாப்பு திட்டத் தாசில்தார் சுடலைமணி, மாவட்ட தி.மு.க. மாணவர் அணி துணைச் செயலாளர் சுந்தர வடிவேலு, சிவகிரி பேரூராட்சி நிர்வாகக் குழு உறுப்பினர் விக்னேஷ், புளியங்குடி நகர தி.மு.க. செயலாளரும் நகராட்சி துணைத் தலைவருமான அந்தோணிசாமி, சிவகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அனைத்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story