'பிராஜக்ட் பள்ளிக்கூடம்' நிகழ்ச்சி - போலீசார் கண்காணிப்பில் மாணவிகளுக்கு துப்பாக்கி பயிற்சி


பிராஜக்ட் பள்ளிக்கூடம் நிகழ்ச்சி - போலீசார் கண்காணிப்பில் மாணவிகளுக்கு துப்பாக்கி பயிற்சி
x
தினத்தந்தி 8 Sept 2022 9:27 AM IST (Updated: 8 Sept 2022 11:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளுக்கு துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை,

பள்ளி மாணவிகளிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 'பிராஜக்ட் பள்ளிக்கூடம்' என்ற நிகழ்ச்சியை கோவை மாவட்ட போலீசார் தொடங்கியுள்ளனர். இதன்படி கோவை மாவட்டம் கோவில்பாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த 34 மாணவிகளுக்கு 'பிராஜக்ட் பள்ளிக்கூடம்' நிகழ்ச்சியின் வாயிலாக போலீசார் பயிற்சி அளித்தனர்.

ஆயுதப்படை வளாகத்தில் போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள், லத்திகள், கலவர தடுப்பு உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு போலீசார் விளக்கினர்.

இதனை தொடர்ந்து துப்பாக்கி சுடும் மையத்திற்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக, இதில் பங்கேற்ற மாணவிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story