ரூ 2 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்,
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்,
பேரணாம்பட்டு உள ராட்சி ஒன்றியத்தில் ரூ 2 கோடியே 11 லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனரும் திட்ட இயக்குனருமான ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு வருகை புரிந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனரும், திட்ட இயக்குனருமான ஆர்த்தி, பி.எம்.ஏ. ஓய் திட்டம், மற்றும் பி.எம்.ஏ.ஓய்.ஜி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மொரசப் பல்லி ஊராட்சியில் 17 வீடுகள், டி.டி. மோட்டூர் ஊராட்சியில் 75 வீடுகள், சாத்கர் ஊராட்சியில் 6 வீடுகள் இவற்றின் மொத்த மதிப்பு ரூ 1 கோடியே 66 லட்சத்து 60 ஆயிரம்,
சின்னதாமல் செருவு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் 80 தனிநபர் கழிவறைகள் மதிப்பு ரூ 9 லட்சத்து 60,000,
மற்றும் வீடுகளில் அன்றாட பயன்பாடான பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் ஆகிய கழிவு நீர் தேங்காதவாறு உறை இறக்கி தனிநபர் நீர் உறிஞ்சு குழி 405 எண்ணிக்கையில் அமைத்தல் மதிப்பு ரூ30 லட்சத்து 37 ஆயிரத்து 500,
சமுதாய சுகாதார கழிப்பிடம் அமைத்தல் ரூ 5 லட்சத்து 25 ஆயிரம்
மொத்த மதிப்பு ரூ 2 கோடியே 11 லட்சத்து 82 ஆயிரத்து 500
மற்றும் பாலூர் ஊராட்சியில் நூலகம் பழுது பார்க்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும் மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, பாரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரசன்னா தேவி நீஸ், சங்கீத பிரியா, ராஜமாணிக்கம், அமீலா, ஓவர்சியர்கள் சலீம், உமாமகேஸ்வரி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.
---
Image1 File Name : 11252001.jpg
----
Reporter : S. MEENAKSHI Location : Vellore - VELLORE SUB-URBAN - PERNAMPET