துப்பாக்கி தொழிற்சாலையை இணைக்கும் அணுகு சாலைகளை பயன்படுத்த தடை


துப்பாக்கி தொழிற்சாலையை இணைக்கும் அணுகு சாலைகளை பயன்படுத்த தடை
x

துப்பாக்கி தொழிற்சாலையை இணைக்கும் அணுகு சாலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அகநகர் அதிகாரி உதவி பணி மேலாளர் கா.தேவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துப்பாக்கி தொழிற்சாலையை இணைக்கும் அனைத்து அணுகு சாலைகளையும் துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவு பணியாளர்களால் வருகிற 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்கள் உபயோகத்தில் இருந்து தடை ஒழுங்கு செய்யப்படும். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலையை இணைக்கும் அணுகுசாலை, நவல்பட்டு கிராமத்தில் இருந்து பர்மாகாலனி வழியாக துப்பாக்கி தொழிற்சாலையை இணைக்கும் அணுகுசாலை, துப்பாக்கி தொழிற்சாலை அகநகரை புதுக்கோட்டையுடன் இணைக்கும் அனைத்து அணுகு சாலைகள் என மேற்கண்ட நடவடிக்கை துப்பாக்கி தொழிற்சாலையை இணைக்கும் அனைத்து அணுகு சாலைகளையும் பொதுமக்கள் உபயோகிக்கும் உரிமையை தடை செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story