வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்க தடை


வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்க தடை
x
தினத்தந்தி 6 Jun 2022 9:34 AM IST (Updated: 6 Jun 2022 10:01 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்க தடை விதிகப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் காசிமேடு மீன் மார்க்கெட் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் திருவிழா போல் மக்கள் கூட்டம் அலைமோதும். சிறு வியாபாரிகள், உணவகங்களுக்கு மொத்தமாக மீன்கள் வாங்குவதோடு, விரும்பிய மீன்களை வாங்க பொதுமக்களும் காசிமேடு மீன் சந்தைக்கு படையெடுப்பார்கள்.

இந்த நிலையில், வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை விதிகப்பட்டுள்ளது. காசிமேடு துறைமுக பகுதியில் பிடிபடும் மீன்களை மட்டுமே இங்கு விற்க அனுமதி அளிக்கப்ப்படுள்ளதாக மீனவ சங்கங்கள சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநில, மாவட்ட மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்வதால் மீன்களின் தரம் பாதிக்கப்படுவதாகவும், அதை போன்று பதப்படுத்தப்பட மீன்களை விற்பனை செய்வதால் இந்த தடை அமலில் இருப்பதாகவும் இதனை ஐக்கிய சங்கங்களின் சார்பாக கண்கானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையையும் மீறி வெளிமாநில மீன்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், மீன்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story