திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரிபேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
ராசிபுரம்
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப் பெற வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழக அரசு 11-1-2021 அன்று வெளியிட்ட அரசு ஆணை எண் 5-ஐ முழுமையாக அமல்படுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழுக்க போராட்டம் நடத்தினர். கல்லூரியின் கேட் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழகம் ராசிபுரம் கிளை செயலாளர் ஐயன் துரை தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண், பெண் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story