ரெயில் முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை
x

சேந்தமங்கலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் வீரப்பன். லாரி டிரைவர். இவரது மனைவி சாரதா. இவர்களது மகன் செல்வகுமார் (வயது 38). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் இவருக்கும், தாயார் சாரதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வகுமார் மன வேதனையில் இருந்துள்ளார். பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளில் சேந்தமங்கலம் அருகே உள்ள பாலப்பட்டி வழியாக செல்லும் சேலம்-கரூர் ரெயில் பாதைக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் செல்வகுமார் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் சிதறி கிடந்தது. இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரது தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்டு அங்கு வந்த சாரதா, மகனின் சிதறிய உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்வகுமாரின் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகி்ன்றனர். தற்கொலை செய்து கொண்ட செல்வகுமாருக்கு ஒரு சகோதரி உள்ளார். அவரது தந்தை வீரப்பன் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story