மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் தேங்காய் கொள்முதல்


மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் தேங்காய் கொள்முதல்
x

ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டது.

ரூ.60 ஆயிரத்துக்கு...

ராமநாதபுரம் விற்பனைக்குழுவின் சார்பில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய வேளாண்சந்தை திட்டத்தின்கீழ் தென்னை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு தங்களது விளைபொருளான தேங்காய்களை மின்னணு சந்தையில் விற்பனை செய்தனர்.

இந்த ஏலத்தில் விவசாயிகள் கொண்டு வந்த 6 ஆயிரத்து 12 தேங்காய்களை ரூ.60 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்து பயன் அடைந்தனர். ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.10 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனர் மூர்த்தி, ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் சரவணக்குமார், நாகமூர்த்தி, மேற்பார்வையாளர் மங்களசாமி மற்றும் பணியாளர்கள் ஏலத்தை நடத்தினர்.

தரகு, கமிஷன் இல்லை

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்று பயனடைந்து வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற ஏலத்தில் பருத்தி விவசாயிகளும், தற்போது தேங்காய் விவசாயிகளும் தங்களது விளைபொருட்களை விற்றுள்ளனர். வாரந்தோறும் வியாழக்கிழமை ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி, மிளகாய், நெல் மற்றும் தேங்காய் போன்ற அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களுக்கும் மின்னணு தேசிய வேளாண்சந்தை திட்டத்தின்கீழ் மறைமுக ஏலம் நடைபெறும் எனவும், விவசாயிகள் விளைபொருட்களை அதிக விலைக்கு எவ்வித தரகு கமிஷன் இன்றி சரியான எடையில் விற்பனை செய்து லாபகரமான விலை பெறலாம் என்று ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story