உடன்குடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


உடன்குடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

உடன்குடியில் விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடியில் விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

ஊர்வலம்

அகில பாரத இந்து மகாசபா சார்பில் உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் கடந்த 31-ந் தேதி 30 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள்அனைத்தும் தனித்தனியாக ஒவ்வொரு வாகனத்தில் ஏற்றி, நேற்று மாலையில் உடன்குடி தேரியூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து 100-க்கு மேற்பட்ட பெண்கள் சிறிய விநாயகர் சிலையுடன் மேள வாத்தியங்களுடன் ஊர்வலம் தொடங்கியது.

கடலில் கரைப்பு

இந்த ஊர்வலம் உடன்குடி மேலபஜார், மெயின்பஜார், கீழபஜார், வில்லி குடியிருப்பு, குலசேகரன்பட்டினம் வழியாக சென்று திருச்செந்தூரை அடைந்தது. அங்கு கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இதில் இந்து மகாசபா மாநில இளைஞர் அணி தலைவர் அய்யப்பன், மாவட்ட தலைவர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தை முன்னிட்டு உடன்குடி மெயின் பஜாரில் ஏராளமான போலீசார், அதிரடி படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் ஊர்வலத்தை பார்வையிட்டனர்.


Next Story