மக்கும், மக்காத குப்பை பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசு
போடி நகராட்சியில் மக்கும், மக்காத குப்பை பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசுகளை நகராட்சி தலைவர் வழங்கினார்.
தேனி
போடி நகராட்சியில் உள்ள வார்டுகளில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குபவர்களுக்கு பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் 20-வது வார்டில் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய 20 வீடுகளை சேர்ந்தவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி, நகராட்சி துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, கவுன்சிலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் 29-வது வார்டு கவுன்சிலர் சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போடி நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.
Related Tags :
Next Story