பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் குப்பை இல்லா நகராட்சி உருவாக்கும் நோக்கில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் மாணவ- மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 15 நகராட்சி பள்ளியைச் சேர்ந்த 150 மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் திருப்பத்தூர் நகராட்சியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு பரிசு, வழங்கும் நிகழ்ச்சி நகராட்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா தலைமை தாங்கினார்.
சமுதாய அமைப்பாளர் மகாலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் , துணைத் தலைவர் சபியுல்லா ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் ரவி நன்றி கூறினார்.