போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு


போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
x

தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் 'கலைக்களம் 2022' என்ற தலைப்பில் கல்லூரி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையிலான நடனம், சிலம்பம், பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு கலைப்போட்டிகள் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி குழு உறுப்பினர்கள் ஜோசப் பெல்சி, டாக்டர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளரும், தாளாளருமான வி.பி.ராமநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் பரிசளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கலையரங்கில் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி செயலாளரும், முதல்வருமான வி.பி.ராமநாதன் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story