போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
x

கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா பரிசுகளை வழங்கினார்.

தஞ்சாவூர்

தஞ்சையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதன் தொடக்கமாக அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு ஏற்றப்பட்டது. அகல் விளக்கை தம்பையா ஏற்றினார். பின்னர் மாநில சமரச சுத்த சன்மார்க்க சங்க தலைவர் அருள் நாகலிங்கம், மாவட்ட செயலாளர் கண்ணபிரான் ஆகியோர் சன்மார்க்க கொடிஏற்றினர். அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஓதுதல், திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது.

இசை நிகழ்ச்சி

பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சன்மார்க்க பெரியோர்கள் ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதையடுத்து திருவருட்பா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வள்ளலார் பற்றி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் நடந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை மண்டல இணை ஆணையர் சூரியநாராயணன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷா புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

தொடர்ந்து சன்மார்க்க பெரியோர்கள் கவுரவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டனர். தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள், வள்ளலார் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா நன்றி கூறினார்.


Next Story