தனியார் பல்கலைக்கழக மாணவர் விஷம் குடித்து தற்கொலை


தனியார் பல்கலைக்கழக மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x

பல்கலைக்கழக மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

பல்கலைக்கழக மாணவர்

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நிகில் (வயது 21), தற்போது இவரது பெற்றோர் மும்பையில் வசித்து வருகின்றனர். நிகில் பொத்தேரி் கக்கன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். ஆன்லைன் மூலம் சோடியம் சல்பேட் என்ற விஷத்தன்மை உடைய பவுடரை வாங்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தான் தங்கியிருந்த அறையில் திடீரென ஆன்லைனில் வாங்கிய கோடியம் சல்பேட்டை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு சக நண்பர் ஆதித்யா சவுத்ரிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறி விட்டு செல்போனை துண்டித்து விட்டார்.

தற்கொலை

உடனே அவரது நண்பர் ஆதித்யா சவுத்ரி, நிகில் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது நிகில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். உடனே சக நண்பர்கள் உதவியுடன் நிகிலை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நிகில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து நிகிலில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் நிகில் பேராசிரியர்கள் யாராவது திட்டியதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story