தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
தக்கலை:
தக்கலை அருகே உள்ள முளகுமூடு, முப்பதாங்கல் பகுதியை சேர்ந்தவர் அமல ராஜேஷ் (வயது35). இவர் ரியல்எஸ்டேட் தொழில் செய்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆனது. அதன்பிறகு குளச்சல், வாணியக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்தார். 2-வது மனைவியும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து வாணியகுடியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் அமல ராஜேஷ், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால், அவர் வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மனமுைடந்த அமல ராஜேஷ் நேற்று காைலயில் பூதமடம் பகுதியில் உள்ள பாறைமீது விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொற்றிகோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.