சொத்து வரி பாக்கியை செலுத்தாததால் தனியார் நிறுவன கட்டிடத்துக்கு 'சீல்'; நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை


சொத்து வரி பாக்கியை செலுத்தாததால் தனியார் நிறுவன கட்டிடத்துக்கு சீல்; நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
x

சொத்து வரி பாக்கியை செலுத்தாததால் கூடுவாஞ்சேரி அருகே தனியார் நிறுவன கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. இதற்கு உண்டான சொத்து வரி ரூ.10 லட்சத்து 78 ஆயிரத்தை கட்டுமான நிறுவனம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு கட்டாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு உடனடியாக சொத்து வரியை கட்ட வேண்டும் என்று ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் நோட்டீஸ் வழங்கி இதுவரை சொத்து வரியை கட்டுமான நிறுவனம் கட்டவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்று நகராட்சி சார்பில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கு சீல் வைத்து கட்டிடத்தை ஜப்தி செய்வதாக சுவரில் நோட்டீசை ஒட்டினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி கூறுகையில்:- சொத்து வரி பாக்கி வைத்துள்ள உரிமையாளர்கள் உடனடியாக சொத்து வரிகளை நகராட்சியில் கட்ட வேண்டும் இல்லையென்றால் இது போன்ற கட்டிடங்கள் ஜப்தி நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார்.


Next Story